ஆர்.எஸ்.எஸ்.அஜண்டாவை நடைமுறைப்படுத்துவதே கவர்னரின் வேலை!•திருச்சியில் எம்.பி.திருமாவளவன் கடும் தாக்கு!
விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளவர் தமிழக ஆளுநர் ரவி. இந்தியாவில் பழமொழிகள் பேசுகின்ற தேசிய இனங்கள் வாழ்கின்றோம். அதிலே ஒன்று ஹிந்தி. தமிழை தாய் மொழியாக கொண்டவர்களை கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்று சொல்லுவது ஆதிக்க போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில மட்டும் அல்ல, இந்தி அல்லாத பிற மாநிலத்திலும் ஹிந்தி திணிக்க கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர்என்.ரவி போன்றவர்களின் மாயாஜால பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என கூறினார். இப்பேட்டியின்போது திருச்சி, கரூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், நிர்வாகி கிட்டு, மாவட்டச் செயலாளர் முசிறி கலைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.