Rock Fort Times
Online News

புகையிலைப் பொருட்கள் கடத்திய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

திருச்சி மாவட்டம், முசிறி பெரியார் பாலம் அருகே கடந்த ஜனவரி 30-ம் தேதி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கர்நாடகத்திலிருந்து திருச்சிக்கு ஒரு கும்பல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை கடத்தி வந்ததாக மைசூர் காயத்ரிபுரம் பிரஜ்வால கவுடா(20), மாண்டியா கே.ஆர்.பேட்டை உமேசா (24) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பகையிலை பொருட்களை பெற வந்த லால்குடி தச்சங்குறிச்சியை சேர்ந்த மு.மணிராஜ் (36), திண்டுக்கல், பாலகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த பெ.தங்கமாயன் (55), சேலம் அம்மாபாளையம் மு. சனந்த்குமார் (26), சேலம் அயோத்தியாபட்டினம் மு.பாலாஜி (35), லால்குடி சிறுதையூர் ச.மயில்வாகனன் (41) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வநாகரெத்தினம் பரிந்துரையின்படி, மணிராஜ் மற்றும் தங்கமாயன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். மேலும், சமூக விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் பொதுமக்கள் 89391 46100 என்ற காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும் என திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

               ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்