கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படவில்லை- டாக்டர் ராமதாஸ் புகாருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்…!
கனவு ஆசிரியர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்கள் , அக்டோபர் 23ந்தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு 28ந்தேதி வரை பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அந்த 54 ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில், வழக்கமாக ஆசிரியர்கள் தான் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். மாணவனாகிய நான் ஆசிரியர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளை காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்கும், அவர்களுடைய வளர்ச்சியை கண்காணிப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.