Rock Fort Times
Online News

திருச்சியில் அம்பர் கிரீஸ் கடத்த முயன்ற கும்பலை அலேக்காக தூக்கியது வனத்துறை… கரன்சி கட்டுகளுக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் பரிதாபம்!

திருச்சியில் அம்பர்க்ரீஸ் எனப்படும் திமிங்கலல உமிழ்நீரை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சென்னை வனக்காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி., மதுரை வனக்காவல் நிலைய போலீசார், திருச்சி மிளகுபாறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கல்லணை கிராமத்தை சேர்ந்த கார்த்திக்(36), வடிவேலன் (42), கோவில்பட்டியை சேர்ந்த சண்முகப்பிரியன் (38), தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தகுமார் (43) மற்றும் கடையநல்லூர் தாலுகா,குணராமநல்லூரை சேர்ந்த ஜெயபால் ஞானசிங் ஆகியோரிடம் இருந்து, சுமார் 19 கிலோ எடை கொண்ட நான்கு அம்பர்க்ரீஸ் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட 5 பேரும்,திருச்சி வனச்சரங்க அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், 5 பேரும் இந்த கடத்தலை கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள்மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்