திருச்சி, கோட்டை பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு…!
திருச்சி, கோட்டை பகுதி மேரிஸ் தியேட்டர் அருகே ரூ.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது கிழக்கு மாநகர செயலாளரும், மண்டலம்_3 கோட்டத்தலைவர் மு.மதிவாணன், மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா,உதவிப் பொறியாளர் இப்ராகிம், இன்ஜினியர் ரமேஷ்குமார், டெக்னிக்கல் உதவியாளர் அஜிஸ், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை, ராஜபாண்டி, பகுதி செயலாளர் மருந்து கடை மோகன், வட்டச் செயலாளர் சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Comments are closed.