திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, காயிதே மில்லத் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் இன்று ( 08.07.2023 ) பாறையடி தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்தது. இதில் தலைவராக கணேஷ் குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . உதவி தலைவர் பதவிக்கு அரவிந்தன், துளசிராம் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு பாலன், மாரிமுத்து, முல்லை ராஜன் ஆகியோரும், இணை செயலாளர் பதவிக்கு பழனியப்பன், சண்முகம் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ரவிச்சந்திரன், சிவக்குமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சூரிய நாராயணன் என்கிற சூரி உள்பட 21 பேர் போட்டியிடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற நிர்வாகிகள் நாளை காலை பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.