Rock Fort Times
Online News

உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு: மக்கள் கொண்டாட்டம்…!

2025ம் ஆண்டு நிறைவுபெற்று 2026ம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வரும் நிலையில் பசுபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவுகளில், 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு 2026ஐ வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. வாணவேடிக்கை நடத்தவும் தயார் நிலையில் உள்ளனர். இந்தநிலையில் உலகில் முதலாவதாக, பசுபிக் தீவான கிரிபாட்டியில் 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. அந்தத் தீவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்