திருச்சியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் அங்குள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி முகவர்களிடம் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
ஜனநாயகமா? பாசிசமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது மக்கள் எங்களுக்கு மிகுந்த வரவேற்பை அளித்தார்கள். இந்த தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கு மகுடம் சூடும் விதமாக அமையும். ஜூன் மாதம் 3ம் தேதி கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு தேர்தல் வெற்றியை கலைஞரின் பிறந்த நாள் பரிசாக முதலமைச்சரிடம் வழங்குவோம் என்றார். தேர்தலில் நீங்கள் வெற்றி பெற, பண விநியோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு யூகத்தை வைத்து பதில் கூற முடியாது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்கு பதிவின் சதவீதம் அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம்.வாக்குப்பதிவு எவ்வளவு வந்தாலும் அது எங்களுக்கு சாதகமாக தான் இருக்கும் என்றார்.
1
of 918
Comments are closed, but trackbacks and pingbacks are open.