Rock Fort Times
Online News

நாங்குநேரியில் நடைபெற்ற இரட்டைக்கொலை ஏற்க முடியாத பெருங்குற்றம்… அதிமுக கண்டனம்…!

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் அரங்கேறிய கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். சட்டம்- ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்தும் திமுக அலட்சிய போக்கின் விளைவு இது. தென் மாவட்டங்களில் நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?. தென் பகுதிகளை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது திமுக அரசின் எண்ணமா? மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, மோதல்களை வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்