திருச்சியில் காதறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் சடலம் ! நகைக்கு ஆசைப்பட்டு நடந்த கொலையா ? போலீசார் விசாரணை!
திருச்சி, கிராப்பட்டி சிறப்பு காவல் படை வளாகம், எதிரே உள்ள ரயில்வே பாலம் முட்தரில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் மேற் கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தது திருச்சி, கிராப்பட்டி, முஸ்லிம் தெருவை சேர்ந்த, சவுரிநாயகம் மனைவி யாகுல மேரி (88) என தெரிய வந்தது. அவரது உறவினரான மற்றொரு மூதாட்டியுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார்.நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இறந்து கிடந்த அவரது காதுகளில் தோடுகள் அறுத்து எடுக்க்கப்பட்டிருந்தன. மேலும் அவரது தலையிலும் ரத்த காயங்கள் இருந்தன. எனவே அவர் நகைக்கு ஆசைப்பட்டு அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.