Rock Fort Times
Online News

திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகம்…- காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்..!

திருச்சி தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்காக புதிய அலுவலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில் திருச்சி பீமநகரில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், புதிய அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் ஈஸ்வரன், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை டி.எஸ்.பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் பால்சாமி மற்றும் அதிகாரிகள், காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் அலுவலகத்தை மாநகர காவல் ஆணையர் காமினி முழுமையாக பார்வையிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்