Rock Fort Times
Online News

அரியலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு- உடல் கருகி ஹோட்டல் உரிமையாளர் பலி…! (பதை பதைக்க வைக்கும் வீடியோ)

அரியலூரை சேர்ந்த அன்பழகன் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இவர் தனது காரில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அன்பழகன் காரை விட்டு இறங்க முயற்சித்தும் அவரால் இறங்க முடியவில்லை. சற்று நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அவரை மீட்க முயன்றனர் ஆனால், தீ ஜுவாலை அதிகமாக இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த தீ விபத்தில் அன்பழகன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் தீப்பிடித்து ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்