Rock Fort Times
Online News

அன்பில் அறக்கட்டளை சார்பில் கல்வி விருதுகள்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்..!

2024-25ம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள், திறனாய்வுத் தேர்வுகள் ஆகியவற்றில் முதல் 5 இடங்களைப் பெற்ற மாவட்டங்கள், 2025-26ம் கல்வியாண்டில் அதிக மாணவர் சேர்க்கை மேற்கொண்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கும், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் துணை நின்ற ஆசியர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் என மொத்தம் 33 பேருக்கு ‌விருதுகள் வழங்கும் விழா “அன்பில் 26” ‌ என்ற பெயரில் காட்டூர் மாண்போர்ட் பள்ளி வளாகத்தில் இன்று (28-08-2025) நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார். விழாவில், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வை.குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப் பிரியா, மாண்போர்ட் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஏ.ராபர்ட், ஆசிரியர் மனசத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார், தன்னம்பிக்கை பேச்சாளர் மதுரை வி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச செயலியும் வெளியிடப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்