Rock Fort Times
Online News

ஜூலை 9-ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்…- திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ் தலைமையில் திருச்சியில் நடந்தது.இதில் ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கடைப்பிடித்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கையாண்டு வருகிறது. போராடிப்பெற்ற சட்ட உரிமைகளை பறித்து சுரண்டலை தீவிரப்படுத்தும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது. அனைத்து மாநில அரசுகளையும் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கி அமலாக்கிட கட்டாயப்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து வரும் ஜூலை 9ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள், ஆதாரவாளர்கள் நேரடியாக ஈடுபட்டு வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, கே. பாலகிருஷ்ணன். உ .வாசுகி, மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி..சம்பத், என். குணசேகரன், கே. பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்