திருச்சி, கண்டோன்மென்ட் பகுதியில் கேம்பியன் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 91- வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நாளை (அக்.16) வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. தலைமை விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மாணவர் மற்றும் திண்டுக்கல் நாகா குழுமத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் கே.எஸ். கமலக்கண்ணன், முன்னாள் மாணவர் மற்றும் திருச்சி ஜோதி குழும நிறுவனங்களின் தலைவர், நிர்வாக இயக்குநர் பி .செல்லா ராமசாமி, சிறப்பு அழைப்பாளர்களாக கேம்பியன் பள்ளியில் 21 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெறும்
ஜூனியர் உதவியாளர் ஹானரீன் எலிசபெத் ரேவி, சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் விருது பெற்ற உடற்கல்வி இயக்குனர் டாக்டர் ஜே.ராஜேஷ் குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கேம்பியன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்து வருகின்றனர்.

Comments are closed.