Rock Fort Times
Online News

தஞ்சை பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தஞ்சை தொகுதியும் ஒன்று. பாரதிய ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன் தஞ்சை தொகுதியில் திடீரென வேட்புமனு தாக்கல் செய்தார். தனது ராசிக்கு நல்ல நாள் என்பதால் மனு தாக்கல் செய்ததாகவும், கட்சி தலைமை வேறு வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவேன் என்றும் அவர் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் முரளிதரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் ஆர்.முரளிதரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்