Rock Fort Times
Online News

திருச்சி, உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா- நாளை பிப்ரவரி 2ம் தேதி தொடங்குகிறது…!

தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு வருகை தந்து சீட்டு கட்டி வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்தக் கோவிலில் நடைபெறும் முக்கிய
திருவிழாக்களுள் தைப்பூசத் திருவிழா சிறப்பு வாய்ந்தது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நாளை பிப்ரவரி 2-ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பிப் 10-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு வெக்காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு ரதத்தில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ம. லட்சுமணன், செயல் அலுவலர் நா. சரவணன் மற்றும் பணியாளர்கள், பக்த பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்