கடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விஜய் என்பவரை போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய். இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடையவர். இவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் கடலூரில் பதுங்கி இருந்த ரவுடி விஜய்யை பிடிக்க முயன்ற போது போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார், தப்பி ஓடிய விஜயை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த என்கவுண்டர் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.