திருச்சி, மேலப்புதூர் பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்துடன் ஹாயாக பறக்கும் வாலிபர்கள்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, மேலப்புதூரை சேர்ந்தவர் தாமஸ். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை இரவு தன் வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மீண்டும் காலை வந்து பார்த்தபோது அவருடைய இருசக்கர வாகனம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து அவர் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரண்டு வாலிபர்கள் தாமஸின் வாகனத்தை திருடி ஓட்டிச் செல்வது பதிவாகி இருந்தது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.