Rock Fort Times
Online News

திருச்சியில் 500 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது! பிரபல ரவுடி தப்பி ஓட்டம்

திருச்சி,காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் பால்பண்ணை விஸ்வாஸ் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓடினார். உடனே உஷாரான போலீசார்,மற்றொரு வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரது பையில் பரிசோதனை செய்தபோது 100 மி.கிராம் எடை கொண்ட 500 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பிடிபட்டவர் திருச்சி சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 24) என்பதும், தப்பி ஓடியவர் பிரபல ரவுடி உறையூர் பாளையம் பஜார் பகுதியைச் சேர்ந்த முகமது ஷெரீப் (22 )என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் ஹரிஷ் குமாரை கைது செய்தனர்.மேலும் தப்பி ஓடிய ரவுடியை தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்