Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து துபாய்க்கு 160 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: 45 நிமிடம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு…!

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 160 பயணிகளுடன் இன்று (டிச.1) துபாய் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை அறிந்த விமானிகள் விமானத்தை அவசரமாக தரை இறக்க முயன்றனர்.
ஆனால், முடியவில்லை. அதனால் சுமார் 45 நிமிடம் வானிலேயே அந்த விமானம் வட்டமடித்தபடி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பயணிகள் பயத்தில் என்ன நடக்கிறது? ஏன் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடிக்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள் பயப்படும்படி ஒன்றும் இல்லை, திருச்சியில் மீண்டும் தரையிறங்க உள்ளதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் விமானத்தில் ஒருவித பதற்றத்துடன் அமர்ந்திருந்தனர். பின்னர் ஒருவழியாக அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். அவர்கள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த சம்பவம் திருச்சியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்