திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 23 வருடங்களாக கணித ஆசிரியராக பாண்டுரங்கன் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது ஆசிரியர் பாண்டுரங்கன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனே மாணவர்கள் அருகில் இருந்த சக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த ஆசிரியர்கள் மயங்கி விழுந்த ஆசிரியர் பாண்டுரங்கனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதிது மாரடைப்பு காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான விருத்தாச்சலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.