அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை மற்றும் உறுப்பு பல்கலைக்கழகங்களில் MBA உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கான TANCET இன்று நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள அண்ணா பலக்லைக்கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் TANCET தேர்வு தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
M.B.A., M.C.A., M.E. , M. Tech. , M. Arch. , M. Plan ஆகிய பட்டபடிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்பார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்லூரிகள், வட்டார வளாகங்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் இந்த படிப்புகளை படிக்கலாம்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் டான்செட் 2023 தேர்வு 2023 பிப்ரவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக M.E. , M. Tech. , M. Arch. , M. Plan ஆகியவற்றிற்கான தேர்வுகள் பிப்ரவரி 25ஆம் தேதியும், M.B.A வுக்கு பிப்ரவரி 26ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்திலிருந்து தேர்வுக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளை மாற்றி,
மாற்றுத் தேதி அறிவித்தது.
அதன்படி தேர்வானது இன்று நடைபெறுகிறது. திருச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்க திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
