காவல்துறையை பொருத்தவரையில் வேலைப்பளு உள்ளிட்ட குமுறல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நேரம் காலம் பாராமல் உழைத்தாலும் பதவி உயர்வுக்கு காத்திருப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. காவல்துறையில் சுமார் ஒரு லட்சம் பேர் பணிபுரிந்தாலும் அவர்களில் சுமார் 15,000 பேர் எஸ்.எஸ்.ஐ முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை உள்ளனர். வழக்கு விசாரணை என்றால் அதில் முக்கியத்துவம் பெறுவது சப்-இன்ஸ்பெக்டர்கள் தான். அவர்களது பணியில் சுமார் 10 ஆண்டு காலம் கடினமான காலம்தான். 10ஆண்டு கழிந்தால் பதவி உயர்வு வரும் என்ற எண்ணம் எதிர்பார்ப்பு மலையேறிவிட்டது .கடந்த 2011 ஆம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டர்களின் சுமார் 830 பேர் 13 ஆண்டுகளைக் கடந்தும் பதவி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். அரசுத் துறைகளில் நேரடியாக அதிகாரிகள் நியமனம் என்பது பல நேரத்திலும் பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது .அதேபோன்று புதிதாக இன்ஸ்பெக்டர் பணியிடம் உருவாக்கப்பட்டு 423 பேர் தேர்வு செய்ய அதற்கான கோப்பு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் டேபிளில் காத்துக் கிடக்கிறது. இது ஒரு புறம் இருக்க சப் இன்ஸ்பெக்டர்கள் எதிர்பார்ப்பது ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழக முதல்வரும், சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்சும் மனது வைத்தால் ஓய்வு பெறும் போதாவது இன்ஸ்பெக்டராக ஓய்வு பெறலாம் என்று பதவி உயர்வை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள். சப் இன்ஸ்பெக்டர்களின் குமுறலை டிஜிபி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் மற்றும் தமிழக உளவு பிரிவு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஐபிஎஸ் ஆகியோர் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இனிப்பான செய்தியை பெற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.