பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் தின விழாவில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில் 13 ஆண்டுகள் கழித்து புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மிகவும் பெருமையான விஷயம். இதற்காக முதலமைச்சர், நான், நிதித்துறை இணைந்து செயல்பட்டோம். புதுச்சேரி முன்னேறி வருவதற்கு முழு பட்ஜெட் ஒரு நல்ல உதாரணம். இதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். புதுச்சேரி ஆளுநர் மீது எந்த விமர்சனமும் வராது, தெலுங்கானா ஆளுநர் மீது வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். புதுச்சேரியின் இரவல் ஆளுனர் தான் , புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். நான் இரவல் ஆளுனராக பணியாற்றவில்லை , இரக்கமுள்ள ஆளுநராக பணியாற்றுகிறேன். பட்ஜெட் உரையை நான் ஒரு மணி நேரம் முழுவதுமாக படித்ததை தி.மு.க உறுப்பினர்களே பாராட்டினார்கள். தமிழக ஆளுநர் ஆர். என். ரவி குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, அந்தந்த மாநில பிரச்சனைகளை அநதந்த மாநிலத்தவர்களே பார்த்துக் கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரங்கள் குறித்து நான் கருத்து கூற முடியாது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், NIT விழாக்களில் தமிழிசை ஏன் கலந்து கொள்கிறார்? என ட்விட்டரில் விமர்சனம் எழுகிறது. ட்விட்டர் மட்டுமல்லாது எவ்வகையிலும் என்னை விமர்சனம் செய்தாலும் தமிழ்நாட்டிற்குள் நான் வருவதை யாரும் தடுக்க முடியாது என்றார்.

Next Post