Rock Fort Times
Online News

தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா-நிர்வாகிகளுக்கு 21 வகையான தடபுடல் சைவ விருந்து…!

பிரபல நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால், அவர் திடீரென தான் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தார். அதன்படி அவர் “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் கடந்த 2024 -ம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கினார். ஆனால், அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல்
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். முன்னதாக விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி தனக்குள்ள செல்வாக்கை நிரூபித்தார். அதனைத்தொடர்ந்து கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
இந்தநிலையில் தமிழக வெற்றிக்கழகம் 2 ம் ஆண்டை கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தவகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தவெக ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில், 2500 நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தவெக ஆண்டு விழாவில் பங்கேற்பதற்கான பாஸ் இருப்பவர்கள்  மட்டும்தான் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மதிய சைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 21 வகையான உணவுகள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

1.கேரட் அல்வா
2. மசால் வடை

3.காலி ஃபிளவர் 65
4. பூரி
5. உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
6. வெஜ் பிரியாணி
7. தயிர் பச்சடி
8. சாதம்
9. கதம்ப சாம்பார்
10. அப்பளம்
11. பூசணிக்காய், சௌ சௌ, காரட், கூட்டு
12. பீன்ஸ் பருப்பு உசிலி
13. ரசம்
14. மோர்
15. சால்ட்
16. வாழைப்பழம்
17. ஐஸ்கிரீம்
18. ஊறுகாய்
19. வாட்டர் பாட்டில் 

20. அடை பிரதமம்
21. பீன்ஸ் கூட்டு

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்