திருச்சி தலைமை அஞ்சலகம் ராணாஹாலில் தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி (முலாயம்சிங் யாதவ்) தொடக்க விழா கூட்டம் நடந்தது . கூட்டத்திற்கு நிறுவன தலைவர் டாக்டர். சுப.சிவபெருமாள் யாதவ் தலைமை வகித்தார். அகிலேஷ்யாதவ் தலைமையிலிருந்து வெளியேறி நேதாஜி முலாயம்சிங்யாதவ் ஆதரவாளர்கள் தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி துவங்குவதற்காண காரணம் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நேதாஜி முலாயம்சிங்யாதவ் 1992 உ.பி.மாநிலத்தில் சமாஜ்வாதி பார்ட்டி(,S.P) என்ற பெயரில் நிறுவினார். அதே ஆண்டில்(1992)ல் தமிழத்திலும், சுதந்திர போராட்ட தியாகி கோயில்பட்டி சி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழகத்திலும் கட்சியை நடத்தினார்கள் என்பது குறித்து விரிவாக பேசப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு: அனைத்து இன மக்களுக்கும் சமநீதி, சமஉரிமை,சமவாய்ப்பு கிடைத்திட சாதிவாரி கணக்கெடுத்து விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்திட தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகி்றது. அனைத்து இனமக்களுக்கும் அரசியல் பிரதிநிதித்துவம், நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் சமநீதி, சமஉரிமை, சமவாய்ப்பு கிடைத்திட அந்தந்த இனமக்கள் தொகைக்கேற்ப வகுப்புவாரி அரசியல் பிரதிநிதித்துவ சட்டமியற்ற வேண்டும் .10 ஆண்டுகளுக் ஒருமுறை தனித் தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றி அமைக்க வேண்டுமென சட்டமிருந்தும் 40,50,60,70 ஆண்டுகள் மாற்றப்படாமல் பிற இனமக்களுக்கான அரசியல் பிரதிநித்துவம் முற்றிலும் மறுக்கும் செயலாக உள்ளது. சட்டப்படி சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பள்ளிகளில் இந்தி மொழியை 5 ம் வகுப்புமுதல் 12 ம்வகுப்புவரை இலவச விருப்ப பாடமாக எழுத, பேச கற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழி அழியும் வகையில் கிராமப்குதி முதல் நகரப் பகுதிவரை ஏறத்தாழ 90% சதவிகித மக்கள் குழந்தைகளுக்கு சமஸ்கிருதம் கலந்த பெயர்களை வைக்கும் நிலை நாளுக்கு நாள் பெருகி வருவதை தடுத்திட , நல்ல தமிழ் பெயர்களைக்கொண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வில் வெகுமதி மதிப்பெண்ணாக 5 மதிப்பெண் அறிவித்து தமிழ் பெயர் வைத்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமென நம்பவைக்க படாதபாடுபடும் பா.ஜ.க, கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த 4% சதவிகித இட ஒதுக்கீட்டை அடித்து பிடுங்கி பா.ஜ.க பிறவிக்குணத்தை வெளிப்படுத்தியது கேவலமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அறந்தாங்கி சரவணமுத்து, ராமநாதபுரம் டி.எம் சாமி, ஸ்ரீரங்கம் ரங்கசாமி ,எம்.செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Prev Post
