தமிழக வெற்றிக்கழக மாநாடு: திருச்சியில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக விஜய் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு…!
தமிழக வெற்றி கழக மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. மாநாட்டிற்கான பணிகள் முழு வீட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாட்டிற்கு தொண்டர்களை அழைக்கும் விதமாக திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் விஜய் படம் போட்ட பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல திருச்சியில் பாலக்கரை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செங்குளம் காலனி, பீமநகர், கூனி பஜார் ஆகிய இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக பாலக்கரை போலீசார் தமிழக வெற்றிக்கழக பாலக்கரை பகுதி செயலாளர் சிவக்குமார் மற்றும் பாலக்கரை, கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ரோபோ வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.