Rock Fort Times
Online News

தமிழக பள்ளிக்கல்வித்துறை “மாஸ்டர் பிளான்”- பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் இனி காப்பி அடிக்க முடியாது…!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரையும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 27 வரையும், 10ம் தேதி வகுப்பு பொதுத் தேர்வினை பொறுத்தவரை மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரையும் நடைபெறுகின்றன. இந்நிலையில் மதுரையில் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாளின் முதல் பக்கத்தை மாற்றி வேறு விடைத்தாளுடன் இணைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற விடைத்தாளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் விடைத்தாள்களின் பராமரிப்புப் பணிகளை நேரடியாக மேற்கொள்ள உள்ளது. விடைத்தாளில் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும் முகப்புப் பக்கத்தை இதுவரை இணைக்கும் பணியை தேர்வு நடக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர். ஆனால், தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மையங்கள் அமைத்து தேர்வுகள் இயக்ககத்தின் கண்காணிப்பில் விடைத்தாள்கள் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. முகப்பு தாள்களின் பக்கங்கள் கிழிந்திருந்தால் அந்த தேர்வு தாள் செல்லாது என்று அறிவிக்கப்படும். மேலும் விடைத்தாள்களின் அனைத்து பக்கங்களும் இணைக்கப்பட்டு, முதல் பக்கத்தை எடுக்க முடியாத வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக பொதுத்தேர்வின் போது வழங்கப்படும் விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் மாணவர்களின் விவரங்கள் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்