உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று( மார்ச் 16) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த நம்முடைய “ஸ்பின் ட்வின்ஸ்” வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தியுடனான மறக்க முடியாத இந்த சந்திப்பின்போது உறுதி-ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை குறித்த அருமையான உரையாடல் நடந்தது. அவர்கள் இருவரும் இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.