தமிழ்நாடு தனியார் துப்பறிவாளர்கள் மற்றும் புலனாய்வு நிபுணர்கள் சங்கம் சார்பில் புத்தாண்டு-பொங்கல் விழா…! * ஜனவரி 3ம் தேதி திருச்சியில் நடக்கிறது!
தமிழ்நாடு தனியார் துப்பறிவாளர்கள் மற்றும் புலனாய்வு நிபுணர்கள் சங்கம் (tapdi) சார்பில் திருச்சி, தென்னூரில் உள்ள ஷான்ஸ் ஹோட்டலில் காலாண்டு கூட்டம் மற்றும் 2026 புத்தாண்டு, பொங்கல் விழா ஜனவரி 3ம் தேதி மாலை 4 மணி அளவில் நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கே.விஜய் ராஜேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். விழாவில் சங்கத்தின் தலைவர் என்.மாதையன், துணைத் தலைவர் கே.சுகுமார், செயலாளர் கே.வி.சர்ச்சில், பொருளாளர் எம்.பி.சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதில், புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து நெறிமுறைப் பழக்கவழக்கங்கள், சட்டப்பூர்வ கண்ணோட்டங்கள் மற்றும் சமூகத்தில் தொழில்முறை மேலாளர்களின் வளர்ந்து வரும் பங்கு குறித்து விவாதிக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருச்சி டைகர் மதனகோபால் சிறப்பாக செய்து வருகின்றார்.

Comments are closed.