Rock Fort Times
Online News

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு… மே 5-ல் திருவாரூரில் நடக்கிறது…!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி, அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜூலு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருகிற மே 5ல் திருவாரூரில் மாநில அளவில் நடைபெறவுள்ள மாநாடு குறித்தும், அதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இக்கூட்டத்தில், தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் நலச்சங்க தலைவர் கந்தன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் என்.ரெங்கராஜன், மாநில இணைச் செயலாளர் எம். தீபக்ராஜா, மாநகர துணைச் செயலாளர் வி.பி.ஆறுமுக பெருமாள், மண்டலத்தலைவர் எம்.தமிழ்ச்செல்வம்,மாவட்டத்தலைவர் ஸ்ரீதர், மாவட்ட துணைத்தலைவர் சுகந்தி ராஜா, மாநகரத்தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்