தமிழக அரசு சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழகம்’ கல்வி எழுச்சி கொண்டாட்ட விழா மற்றும் நடப்பு கல்வியாண்டுக்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் தொடக்க விழா ஆகியவை சென்னையில் நேற்று(25-09-2025) நடைபெற்றது. இதில், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட அரசின் 7 திட்டங்களில் பயன்பெற்று முக்கிய இடங்களில் பணியாற்றும் பயனாளிகள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 318 பேர் பயன்பெறும் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், கல்வியில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி. தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டில் இருந்து காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி. கல்வியில் தமிழகம், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.