Rock Fort Times
Online News

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி- உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை, வக்பு வாரியம், தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று (06-01-2026) தீர்ப்பு அளித்தனர். அதில், “கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது. தீபத்தூண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. ஆகவே தீபம் ஏற்றலாம், “என்று தெரிவித்து தனி நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்