Rock Fort Times
Online News

திருச்சியில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் திடீர் ஆலோசனை ….

கோவை சரக டிஜிபி சி.விஜயகுமார் ஐபிஎஸ் துப்பாக்கியால் சுட்டு நேற்று காலை தற்கொலை செய்து கொண்டதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ஒவ்வொரு மண்டலத்திலும் தற்போது காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், தற்போது திருச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மன அழுத்தத்தை போக்குவது எப்படி? என்பது குறித்தும், உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். திருச்சி மத்திய மண்டல காவல் சரகத்திற்கு உட்பட்ட 9- மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் மன அழுத்தம் போக்குவது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

சைபர் கிரைம் குற்றங்கள், போதை வஸ்துகள் விற்பனையை தடுப்பதில் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும், பொதுமக்கள் – காவல்துறை நட்புறவை பேணிக்காக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜீவால் அறிவுரை வழங்கினார். திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்டதிருச்சி மாநகர், திருச்சி மாவட்டம், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9- மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக காவல்துறை இயக்குனர் (டிஜிபி) சங்கர்ஜிவால் தலைமையில் காவல்துறையினரின் மன அழுத்தம் போக்குவது குறித்தும், சட்ட ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருச்சி மாநகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டி.ஐ ஜி சரவணன் சுந்தர், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா உள்ளிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்