தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை (15.06.2025) சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். திருச்சியில் இருந்து சாலை வழியாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்லவுள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்யும் சாலைகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே, 15.06.2025 மற்றும் 16.06.2025 ஆகிய 2 நாட்கள் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed.