தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில துணைத் தலைவராக பதவி வகித்தவர் திருச்சி ஏ.ஆர்.பாட்ஷா. சமூக ஊடகங்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் இவருடைய அனல் பறக்கும் பேட்டிகள் பிரபலம். இவரை பின்பற்றும் இளைஞர்கள் ஏராளம். பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவை பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக மாற்றியதில் இவரின் பங்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட பொழுது அன்றிலிருந்து தொடங்கிய இவரது வேகம் எந்த இடத்திலும் தடைபடாமல் விறுவிறுப்பாகவே சென்று கொண்டு இருந்தது. இவர் வசிக்கும் பகுதியான தென்னூர் ஏரியாவில் திமுக பலம் வாய்ந்ததாக இருந்தாலும், இவர் சார்ந்த சமூகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் அத்தனையையும் தவிடு பொடியாக்கி அவர் சார்ந்த சமூக மக்களிடம் பாஜகவின் மீது அளப்பரிய மதிப்பையும், அன்பையும் உருவாக்கி பல இஸ்லாமிய சகோதரர்களை பாஜகவின் பக்கம் கொண்டு வந்தவர். இந்நிலையில் இவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகருக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Comments are closed.