தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. அதன்படி, வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக 21ம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23ம் தேதி வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் என 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.