தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட நிறைவுறும் நிலையில் இருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். தற்போது அதிமுக வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 27-ம் தேதி) மாமல்லபுரத்தில் த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினமே வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments are closed.