மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று( பிப்.3) கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பேரணியாக வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அந்தவகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பிரசார வேனில் ஏறி அமர்ந்தபடி நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், டி.டி.வி.தினகரனின் சித்தியுமான சசிகலா, அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காரில் வந்தார். இதுகுறித்து அறிந்த டி.டி.வி.தினகரன், உடனடியாக பேட்டியை முடித்துக் கொண்டு வேனில் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Comments are closed.