சுவீடன் நாட்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்,கல்வி கலாச்சார பரிமாற்ற குழுவினர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் .அந்தக் குழுவில் சுவீடன் நாட்டை சேர்ந்த 3 ஆசிரியர்கள், அந்நாட்டில் 12ம் வகுப்பு பயிலும், 11 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக அக்குழுவினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா ஐ.பி.எஸ்ஸை சந்தித்தனர். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, இந்திய கல்வி, கலாச்சாரம், தமிழக காவல்துறையின் செயல்பாடுகள், செஸ் ஒலிம்பியா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாநகர கமிஷனர் பதிலளித்தார். மேலும் சுவீடன் மாணவர்களுடன், தனது பணி அனுவபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். இது குறித்து சுவீடன் பள்ளி மாணவர்கள் கூறும்போது, போலீஸ் கமிஷ்னருடன் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவரின் பேச்சில் இருந்து ஏராளமான குறிப்புகள் நாங்கள் எடுத்து உள்ளோம். தமிழக காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளதையும், பெருமை கொள்ளும் விதமாக செயல்படுவதையும் வியந்து கேட்டோம் என்று அவா்கள் கூறினா்.

**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.