திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மரக்கடை, தில்லைநகர், புத்தூர் (புதியது), உறையூர் (புதியது), விறகுபேட்டை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலைய வளாகத்தினுள் கட்டப்பட்டு வரும் 20.00 இலட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட முதன்மை சமநிலை நீர்தேக்க தொட்டியின் கட்டுமான பணிகள் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் நகரப் பொறியாளர் சிவபாதம்,செயற்பொறியாளர்கள் உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
