Rock Fort Times
Online News

வியக்க வைக்கும் ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல்…!

ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (ஜூலை) ரூ.1.96 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், “கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,95,735 கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலான தொகையைவிட 7.5 சதவீதம் அதிகம். கடந்த மாதம் வசூல் ரூ.1.84 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. மொத்த உள்நாட்டு வருவாய் 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.43 லட்சம் கோடியாகவும், இறக்குமதி வரி 9.5 சதவீதம் அதிகரித்து ரூ.52,712 கோடியாகவும் உள்ளது. ஜிஎஸ்டி ரீபண்ட் ஆண்டுக்கு ஆண்டு 66.8 சதவீதம் அதிகரித்து ரூ.27,147 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூலை 2025-ல் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 1.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்