Rock Fort Times
Online News

தமிழக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு:- திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், அந்த மசோதாக்களை ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று(08-04-2025) தீர்ப்பளிக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், மாவட்டக் கழக நிர்வாகிகள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன், நீலமேகம், விஜயகுமார், ராஜ்முஹம்மது, பாபு, மணிவேல் மாநகரக் கழக நிர்வாகிகள் நூர்கான், பொன்செல்லையா மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்