தமிழகத்தில், 1 முதல் 12 -ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு நிறைவு பெற்றதால் ஜூன் 1 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோடை விடுமுறை நாட்களில் சிலர் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா மையங்களுக்கும், சிலர் தங்களது உறவினர் இல்லங்களுக்கும் செல்வர். இதனால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோது கிறது. ஆகவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி-தாம்பரம் இடையே நாளை(29-04-2025) முதல் ஜூன் 29 வரை இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.40 மணிக்கு திருச்சி வந்தடையும். வாரத்தில் 5 நாட்கள் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Comments are closed.