Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் கோடைக்கால சேவை தொடக்கம்: பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் விநியோகம்!

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிகரித்து வரும் வெப்பத்தால் பக்தர்கள் உடல்நலம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீரங்கம் ரங்க விலாசம் மண்டபம் அருகே பக்தர்களுக்கு நீர்ச்சத்து மிகுந்த பானகம் மற்றும் மூலிகை நீர்மோர் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இந்த சேவை, கோடைக்காலத்தில் பக்தர்கள் சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தொடங்கி வைத்தார். மேலும், இந்த நீர்மோர் மற்றும் பானகம் வழங்கும் பணி இன்று முதல் ஜூன் மாதம் இரண்டாம் வாரம் வரை தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்