திருச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் கோடை மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்தது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் திருச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்து வந்தது. அந்தவகையில் இன்றும் காலை முதல் அதிகளவு வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் திருச்சி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்நிலையில் மாலை வானம் மேகமூட்டமாக மாறி சிறிது நேரத்திலேயே இடி மின்னலுடன் மழை பெய்தது. வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து பெய்த மழையால் திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments are closed.