திருச்சி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பெண் போலீசார் தொட்டியம், துவாக்குடி, இனாம்குளத்தூர், மணிகண்டம், சமயபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல புத்தாநத்தத்தில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.