தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 2-ல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. வெயில் அதிகரிப்பு காரணமாக பிளஸ்-2 தேர்வு முடிவு தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவியது.

ஆனால், மே 6ம் தேதி திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என தமிழக கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திட்டமிட்டபடி நாளை (06-05-2024) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ- மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக அவர்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.