Rock Fort Times
Online News

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் அதிரடி…!

திருச்சி மாவட்ட எஸ்.பி. யாக பணியாற்றிய வருண்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக திருச்சி எஸ்.பி.யாக செ.செல்வ நாகரத்தினம் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (06.01.2025) காலை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம்- ஒழுங்கு நல்லமுறையில் பேணி காக்கப்படும். ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருச்சி மாவட்டத்தில் சொத்து தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், மேற்கொண்டு எவ்வித குற்றங்களும் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் களைந்து தீர்வு காணப்படும். பொதுமக்களுடன் காவல்துறையினர் நல்லுறவு மேம்படுத்தப்படும். காவல் துறையினரின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து தரப்படும். அவர்கள் எவ்வித மனசோர்வு இல்லாமல் பணியாற்ற வழிவகை செய்யப்படும். காவல் நிலையங்களில் திறன்பாடு மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்